உயிரிழந்த ரஷ்யா கூலிப்படை தலைவருக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அஞ்சலி
விமான விபத்தில் கொல்லப்பட்டதாக கருதப்படும் ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னரின் பிரிகோஜினுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அஞ்சலி செலுத்தப்பட்டது .
நேற்று விபத்துக்குள்ளான விமானத்தில் ரஷ்யாவின் கூலிப்படையான யெவ்ஜெனி பிரிகோஜின் பயணம் செய்த நிலையில் விமான விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மலர்கள் வைத்து அஞ்சலி
இதை அடுத்து, அதிகாலை வாக்னர் கூலிப்படையின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அலுவலகத்திற்கு அருகில் மலர்கள் வைத்து மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.
அதேசமயம் வாக்னர் கூலிப்படையின் தலைவரும், ராணுவத்தின் தலைமையின் எதிரியாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவருமான பிரிகோஜினின் கதி குறித்து கிரெம்ளின் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேவேளை ரஷ்ய திபர் புடினுக்கு மிக நெருக்கமாக செயபட்டு வந்த வாக்கன்ர் கூலிப்படை , உக்ரைன் ரஷ்ய போரில் பெரும் பங்காற்ரியிருந்ததாக கூறபபட்டிருந்தது.
எனினும் அதன் பின்னர் புடினுக்கு எதிராக வாக்கன் கூலிப்படை திரும்பியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் இங்கு புறிப்பிடத்தக்கது.