உயிரிழந்த காவந்திஸ்ஸ யானைக்கு அஞ்சலி நிகழ்வு
இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு அண்மையில் உயிரிழந்த ‘காவந்திஸ்ஸ’ யானைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, அம்பாறை நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் நேற்று (25) நடைபெற்றது.
அம்பாறை சாஸனாரக்ஷக பலமண்டலத்தின் செயலாளரும், நாமல் ஓயா கல்லூரியின் பிரதி அதிபரும், கல் ஓயா நதி பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், நாமல் தாலவ சைலபாம்பராம விகாரையின் ஸ்தாபகருமான சாஸ்திரவேதி கம்பஹ நாரத தேரர் தலைமையில் மத அனுஷ்டானங்களுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, உயிரிழந்த ‘காவந்திஸ்ஸ’ யானையின் நினைவாக விசேட மதக் கிரியைகள் இடம்பெற்றதுடன், வனவிலங்குகள் மற்றும் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.