தொடர் மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் நிலவிவரும் தொடர் மழைவீழ்ச்சியில் காரணமாக காய்கறிகள் பலவற்றின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
அதோடு பொருளாதாரச் சூழலால் முட்டை மற்றும் கோழி இறைச்சிப் பயன்பாடு சுமார் 20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையினால் மரக்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளதே இந்த விலை அதிகரிப்பிற்கு பிரதான காரணமாகும் என மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தின் முன்னாள் பிரதம அமைப்பாளர் அனில் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
முக்கிய காய்கறிகளின் மொத்த விலை நிலவரம்
பண்டிகைக் காலம் நெருங்குவதால் காய்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி மு கடந்த வாரம் 350 ரூ – 400 ரூபாவாக இருந்த நிலை மாறி, தற்போது 600.ரூ – 650 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கறி மிளகாய் : 250 ரூபாவிலிருந்து 400.ரூ – 450 ரூபாவாக அதிகரித்துள்ளது. கோவா: 150 ரூபாவிலிருந்து 350 ரூபாவாக அதிகரித்துள்ளது. போஞ்சி : 400 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கரட் : 200 ரூபாவிலிருந்து250 ரூபாவாக அதிகரித்துள்ளது. லீக்ஸ் : 200 ரூபாய் பச்சை மிளகாய் : 350 ரூபாவிலிருந்து 400 ரூபாவாக அதிகரித்துள்ளது.
புடலங்காய் : 400 ரூபாய் பாகற்காய் / பீர்க்கங்காய்: 200 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக அதிகரித்துள்ளது பூசணிக்காய் : 200 ரூபாவுக்கு மேல் பூசணிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற ஒருசில காய்கறிகள் மட்டுமே தற்போது கிலோ ரூ. 100 க்கு கீழ் விற்பனை செய்யப்படுகின்றன.
டிசம்பர் பண்டிகைக் காலம் நெருங்குவதால் வரும் நாட்களில் காய்கறி விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் கொள்வனவு சக்தி குறைந்துள்ளமையால் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டையை உற்பத்தி செய்ய ரூ. 30 முதல் ரூ 32 வரை செலவாகும் நிலையில், பண்ணையாளர்கள் முட்டையை அதே ரூ. 30 – ரூ 32 விலையிலேயே சந்தைக்கு விநியோகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதனால் உற்பத்தியாளர்களுக்கு இலாபம் கிடைக்காத சூழல் நிலவுகிறது. முட்டை மற்றும் கோழி இறைச்சி நுகர்வு சுமார் 20 சதவீதத்தால் குறைந்துள்ளது. நுகர்வு குறைந்தபோதிலும் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நவம்பர் 15 ஆம் திகதிக்குப் பின் பண்டிகைக் காலம் தொடங்குவதால், சந்தையில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி முட்டை மற்றும் கோழி இறைச்சியைப் போதுமான அளவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
பண்டிகைக் காலத்தில் நிலைமை சீராகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.