சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் 2026.10.24 அன்று நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்களம்) போட்டிகளில் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் குழுப்பாடல், பேச்சு, வாசிப்பு போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
குறித்த போட்டிகள் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. சிங்களமொழி குழுப்பாடல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகளான தரம்-06 செல்வி K . பவிஷ்கா, S.ஹாசினி

தரம் - 07 R . கம்சிகா, N . தனிஷ்கா, தரம் - 08 P . சாத்விகா , P. கம்சினி, தரம்- 09 ஜதுசிகா, R . அக் ஷ்தா ஆகியோர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். சிங்கள பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தரம் - 06 மாணவி R. கனித்திராவும், வாசிப்பு போட்டியில் தரம் - 09 S. ஜதுசிகா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். இந்த மாணவிகளை சிங்கள மொழி ஆசிரியரான திருமதி சங்கீத் சுகந்திகா அவர்கள் சிறப்பாக வழிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.