கலா ஓயாவில் பேருந்தில் சிக்கியவர்களை மீட்க முப்படையினரின் உதவி
புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் கலா ஓயாவை அண்மித்த பகுதியில் பஸ்ஸில் சிக்கியிருந்து, அருகில் உள்ள வீடொன்றின் கூரையில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளை மீட்க முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், ஆரம்பத்தில் கடற்படையின் ஒரு நிவாரணக் குழுவை பயன்படுத்தி மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக அது தோல்வியடைந்ததாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தற்போது கடற்படையின் செயற்பாட்டுத் தொகுதி, இலங்கை கடற்படை நீச்சல் பிரிவு, விசேட படகுப் படைப் பிரிவு போன்றவற்றை உள்ளடக்கிய மேலதிகப் படையினர் இந்த மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டு வருவதாகவும் கடற்படைத் தளபதி குறிப்பிட்டார்.