இலங்கையின் அதிகார மாற்றம்; ஐநா முன்வைத்த கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு பேச்சு வார்த்தை நடத்த ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டோனியா குட்டரஸ் (António Guterres) கூறியுள்ளார்.
இந் நிலையில் இலங்கையில் ஏற்படும் மாற்றங்களை செயலாளர் நாயகம் அவதானித்து வருகின்றார் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் (Burhan Haq) விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயலாளர் இலங்கை மக்களுடன் இணைந்துள்ளார் அத்துடன் அமைதியை பேணுவதற்கு பொறுப்பானவர்களா பொறுப்பு கூற வேண்டும் என்று அழைப்பு விடுகின்றார் என்று அந்த அறிக்கையில் தொடர்கிறது.
மேலும் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதாக பர்ஹான் ஹக் (Burhan Haq) தெரிவித்துள்ளார்.