கனமழையுடனான பனிமூட்டம்; பள்ளத்தில் கவிழ்ந்த கெப்ரக வாகனம்
கனமழையுடனான பனிமூட்டத்தால் கெப்ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்நது விபத்திற்குள்ளாகியுள்ளது
இந்த விபத்துச் சம்பவம் மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது
இன்று காலையில் திடீரென கனத்த இடிமின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் ஹட்டன் பகுதி முழுவதும் பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது.
வீதி முழுவதும் பனிமூட்டத்தால் காணப்பட்டதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மஸ்கெலியா காட்மோர பகுதியில் இருந்து கட்டுகஸ்தொட்ட நொக்கி சென்ற கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.
கெப் ரக வாகனத்தில் மூன்று பெண்கள் மற்றும் சாரதி அடங்கலாக நால்வர் பயணம் செய்துள்ளனர்.
தெய்வாதீனமாக கெப் ரக வாகனம் மண் திட்டில் சரிந்து நின்றதால் எவருக்கும் காயங்கள் ஏற்பட வில்லை என்று ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.