இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நைனமடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வென்னப்புவ திசையிலிருந்து தோப்பு திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வலது பக்கமாகத் திரும்ப முற்பட்டபோது, பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதனையடுத்து, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து எதிர்த்திசையில் வந்த பஸ் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.