கிளிநொச்சியில் மகனை காணாது தேடிய தாய், தந்தைக்கு காத்திருந்த துயரம் ; 19 வயது இளைஞனின் விபரீத முடிவு
கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி பகுதியில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவமானது நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தமைக்கான காரணம்
நேற்றையதினம் இரவு பலமணி நேரம் ஆகியும் இளைஞனை காணவில்லை என தாய் மற்றும் தந்தை இணைந்து தேடியுள்ளனர்.
எனினும் தமது மகன் நண்பர்களுடன் சென்றிருப்பார் என்ற எண்ணத்தில் அவர்கள் உறக்கத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் தந்தை மாடு கட்டுவதற்காக சென்ற நிலையில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் உயிரிழந்திருப்பதை அவதானித்ததாக தெரியவருகின்றது.
இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இச் சம்பவம் குறித்து ஜெயபுரம் பொலிஸாருக்கு உடனடியாக ஊரவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையிலும் தாமதமாகவே பொலிஸார் அங்கு சென்றதாகவும், தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.