துயரை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் மரணம் ; கால்வாய்க்குள் சடலமாக கிடந்த அவலம்
இரத்தினபுரி பலாங்கொடை பின்னவல பகுதியிலிருந்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடையிலுள்ள பின்னவல பொலிஸ் நிலையத்தில் இரவுப் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கனத்திரியன்வெல பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்திருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பின்னவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 43- வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிராம மக்கள் வழங்கிய தகவலையடுத்து பின்னவல பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.