காலியில் கொடூர விபத்து சம்பவம்: இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
எல்பிட்டிய, மாபலகம வீதியின் காந்தகஹ சந்தியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்து லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் 30 மற்றும் 35 வயதுடைய இருவரே உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இச்சமபவம் தொடர்பில், லொறியின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.