சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த மாணவனுக்கு நேர்ந்த பெரும் துயரம்
எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த களுத்துறை கல்லூரியின் மாணவன் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று குறித்த மாணவன் பேரூந்தில் பயணித்துள்ளார்.

பொலிஸார் நடவடிக்கை
இதன்போது போக்குவரத்து விளக்கு அருகில் பேரூந்து நின்ற வேளையில் மாணவன் பேரூந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது பின்னால் வந்த முச்சக்கரவண்டி ஒன்று அவர் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து முச்சக்கரவண்டிச் சாரதி உடனடியாக மாணவனை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொட போதனா மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும் விபத்தின் போது மாணவனின் முதுகெலும்பில் ஏற்பட்ட பலத்த காயங்களின் காரணமாக இன்று வியாழக்கிழமை (22) அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்வபம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முச்சக்கர வண்டி சாரதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.