மரண வீட்டுக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (12) மாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
ஹட்டன் பகுதியில் இருந்து வந்த பேருந்திற்கு இடம் வழங்க முற்பட்ட போதே குறித்த முச்சக்கர வண்டி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதியில் உள்ள மரண வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.