கிளிநொச்சி - ஏ9 வீதியில் கோர விபத்து; முதியவருக்கு நேர்ந்த கதி
கிளிநொச்சி - ஏ9 வீதியில் பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் முதியவரின் கால் துண்டாகியுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று இந்த விபத்து சம்பவம் தனியார் வங்கி முன்பாக உள்ள பாதசாரி கடவையில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த 75 வயதான நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் ஏ9 வீதியை கடக்க முற்பட்டபோது டிப்பர் வாகனம் அவரை மோதியுள்ளது. விபத்தில் முதியவரின் கால் துண்டாகியதுடன், தலைப்பகுதியிலும் பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விபத்து சமபவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

