யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கதறும் உறவுகள்
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

பொலிஸார் விசாரணை
சுமார் ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில், ஒருவர் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.
அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன' சிறிது நேரத்திற்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் குறித்த இளைஞனைக் காணாததால், ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, கயிறு அறுந்த நிலையில் இளைஞனைக் காணவில்லை.
பின்னர் ஏனையவர்களின் உதவியுடன் தோட்டக் கிணற்றில் தேடியபோது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.