யாழில் பொருட்களை வழங்க வந்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூரியர் சேவையில் பொருட்களை வழங்க வந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஒன்லைனில் பதிவு செய்யப்பட்ட பொருளை வழங்குவதற்காக இளவாலை பகுதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட நபர்
அவர் அப் பொருளை வழங்கிவிட்டு பணம் கேட்டபோது அவர் வீட்டினுள் அழைத்துச் செல்லப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்கியவரை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் அந்நபரை முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.