காதல் மனைவியால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்
நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் சவேரியார்பாளையத்தை சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவர் ராணிப்பேட்டையை சேர்ந்த பெண்ணை காதலித்து கடந்த மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

விசாரணை
இந்த நிலையில் சம்பவத்தன்று நண்பர்களை பார்க்க செல்வதாக மனைவியிடம் இளைஞன் கூறியுள்ளார். அதற்கு அவரது மனைவி தடுத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்குள் சென்றார்.
வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டின் அறைக்குள் சென்றுபார்த்தபோது தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அவருடைய தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.