யாழில் மகளின் பிணக்கை தீர்க்க சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மீளப் பெறச் சென்றவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பரமேந்திரம் ரஜீவ்குமார் (வயது – 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அராலிப் பகுதிக்குக் கனடாவிலிருந்து விடுமுறையில் ஒரு தம்பதியர் வந்திருந்தனர்.
குடும்ப முரண்பாடு
இதன்போது அவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடு எழுந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தனது மகள் முறைப்பாட்டைச் செய்தார்.
இந்தநிலையில் கனடாவில் இருந்த வந்த பெண்ணின் தந்தையார் கொழும்பிலிருந்து வருகை தந்து பிரச்சனையை சமுக நிலைக்கு கொண்டு வந்துள்ளார்,
இதையடுத்துக் தனது மகள் மற்றும் மருமகனுடன் கொழும்புக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்து பெண்ணின் தந்தை முறைப்பாட்டை மீளப்பெறுவதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்போதே குறித்த நபர் , அங்கு மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.