டிரம்பின் மற்றொரு அதிரடி வரி ; உலக சினிமாத்துறையில் அதிர்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உலக சினிமாத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் 100 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் சினிமா தயாரிப்பு தொழில், பிற நாடுகளால் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இது குழந்தையின் கைக்குள் இருக்கும் ‘மிட்டாயை’ திருடுவது போலத்தான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், அமெரிக்க திரைப்படத் தொழில்துறை, கலவையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது.
சில ஹொலிவூட் தயாரிப்பாளர்கள், இது அமெரிக்கத் திரைப்படங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் நல்ல முடிவு என்று கூறியுள்ளனர்.
அதேசமயம் சில தயாரிப்பாளர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.