எல்ல விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த துயரம்
எல்ல - வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்து பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 2ஆவது சிறப்புப் படையை சேர்ந்த பண்டார என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் சிகிச்சை
விடுமுறை தினத்தை முன்னிட்டு வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரது முகத்தில் கல்லொன்று சரிந்து வீழ்ந்ததில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது.
காயமடைந்த நபர் தற்போது பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எல்ல பிரதேசத்தில் சுற்றுலா சென்ற பேருந்து 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமத்திக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.