தமிழர் பகுதியில் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த அவலம் ; நடுவீதியில் பிரிந்த உயிர்
முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
ஆட்டோவில் சிறுவன் பயணித்துக் கொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டி சாரதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்தை கடந்து செல்லும் போது முச்சக்கரவண்டியில் இருந்த சிறுவன் சிறிய உழவு இயந்திரத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய சிறுவன் ஆவார்.
சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.