தனித்திருந்த வெளிநாட்டு தொழிலதிபரின் மனைவிக்கு நடந்தேறிய துயரம் ; இலங்கையின் பிரபல விடுதியில் சம்பவம்
நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து 26 வயதுடைய சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் 9ஆவது மாடியில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண் திருமணமானவர் என்பதும், அவரது கணவர் ஒரு தொழிலதிபர் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் அவரது கணவர் வணிக நிமித்தமாக குருநாகல் பகுதிக்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கீழே வீழ்வதற்கு முன்னதாக சுமார் ஒரு மணிநேரம் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் அவரது கையடக்கத் தொலைபேசியை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.