யாழில் போக்குவரத்து பொலிசார் அட்டகாசம்; மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 8 மணி முதல் புத்துார் சோமஸ்கந்தா பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்துப் பொலிசார் மிகக் கேவலமான முறையில் வாகனச் சாரதிகளை அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றதாக விசம் வெளியிடப்பட்டுள்ளது.
புத்துார் சந்திக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில் உள்ள ஒற்றைக் கோட்டைத் தாண்டி வருவதாக கூறி நீதிமன்ற நடவடிக்கை என சாரதிகளை அச்சுறுத்தி ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையாக பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டத்தரணிகளே 5 ஆயிரம் வாங்குவாங்கள்
இந்நிலையில் கோட்டைத் தாண்டாமல் வந்த வாகனங்களைக் கூட வழி மறித்து ஒற்றைக் கோட்டை தாண்டி வருவதாகக் கூறி வழக்குப் பதியப் போவதாக அச்சுறுத்தி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அதோடு நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதாக அச்சுறுத்தி அங்கு போனால் சட்டத்தரணிகளே உங்களிடம் 5 ஆயிரம் வாங்குவாங்கள்.
அ்த்துடன் தண்டனைப் பணம் 7500 கட்ட வேண்டும். மேலும் மல்லாகம் நீதிமன்றத்தில் வந்து ஒரு நாள் முழுவதும் நிற்க வேண்டும் என கூறி ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையான பணத்தைப் பெற்று வருகின்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.