கொழும்பு-கண்டி பிரதான வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதம்!
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியுடனான போக்குவரத்து நிட்டம்புவ நகரில் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனவே, குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேசமயம் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நாடளாவிய போராட்டத்திற்கு ஆதரவாக புறக்கோட்டையில் உள்ள சில மொத்த விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
4ஆம் மற்றும் 5ஆம் குறுக்குத் தெருக்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்காரணமாக புறக்கோட்டை பகுதியில் மக்கள் நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைவடைந்துள்ளதையும், சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாதிருப்பதாகவும் கொழுபுத்தக்கவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
நாடு தழுவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
முற்றாக முடங்கிய கொழும்பு! (Photos)