இணையவழி குற்றங்களுக்கு எதிரான ஐ.நா சமவாயத்திற்கு அனுமதி
இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNCC) 2024 டிசம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 55 ஆவது பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அது மோசமான இணையவழிக் குற்றங்கள் பலவற்றுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய அணுகுமுறையாகும்.
குறித்த புதிய சமவாயத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் இலங்கையில் இடம்பெறுகின்ற இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்காகவும் மற்றும் அவற்றுக்கு எதிராகப் போராடுதல், ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தல் சொத்துக்களை மீண்டும் கையகப்படுத்தல், சாட்சியாளர்கள் மற்றும் இன்னலுற்றவர்களைப் பாதுகாத்தல், தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் மற்றும் இயலளவை விருத்தி செய்தல் போன்ற பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காக இயலுமை கிட்டும்.
அதற்கமைய, இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் கையொப்பமிடுவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதியும் நிதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும், வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஒருங்கிணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.