வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்த மரத்தால் போக்குவத்து பாதிப்பு
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவளை பகுதியில் மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (02) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அட்டன் - கொழும்பு, அட்டன் - கண்டி வீதிகளில் போக்குவத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பெய்த கடும் மழையை தொடர்ந்து இந்த மரம் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியை கடக்க முடியாத நிலை
மரம் வீதியின் குறுக்கே வீழ்ந்ததன் காரணமாக இந்த வீதி ஊடாக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய வாகனங்கள் ஆபத்தின் மத்தியிலும் மரத்தின் கீழால் வீதியை கடக்க முடிவதுடன் ஏனைய வாகனங்களுக்கு வீதியை கடக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த வீதியூடான போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் அட்டன் - கொழும்பு, அட்டன் - கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளை தற்காலிகமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் மரத்தினை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.