தமிழர் பகுதி சந்தையில் பெண்ணை தாக்கிய மரக்கறி வியாபாரி; வெளியான காணொளி!
மட்டக்களப்பு கல்முனை சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்ய சென்ற தமிழ் பெண் மீது காட்டுமிராண்டினமாக நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (18) இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் அது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
வாய் தகராறு கைகலப்பாக மாறியது
இதன் போது மரங்கறி வியாபரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கும் மற்றுமொருவருக்கும் வாய்தகராறு கைகலப்பாக மாறியது.
இதனையடுத்து அந்த நபர் பெண்ணை சுரக்காய் ஒன்றினால் தாக்கியுள்ளார். இதனையடுத்து பெண் அந்த சுரக்காயை பறித்து நபர்மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் மக்கள் கூடும் சந்தையில் பெண் மீது தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை மட்டக்களப்பு நகரில் வீதியால் செல்வோரை கடைக்கு வருமாறு ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு இரு ஆடை ள் விற்பனை நிலைய ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.