ஜனாதிபதி அநுரவால் முடிவுக்கு வந்த தொழிற்சங்க நடவடிக்கை
சுங்க தொழிற்சங்கக் கூட்டணி இன்று முற்பகல் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட 323 கொள்கலன்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்க சுங்க பணிப்பாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்திருந்தது.
இந்தநிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.