தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் மத குருமார் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வாங்குவதற்கான சுமார் 3,000 ரூபாய் வவுச்சர்கள் வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவின்படி குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 6,000 பாடசாலைகளில் கல்விகற்கும் 650,000 மாணவர்களுக்கும் , 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலையின் 140,000 மாணவர்களுக்கும் இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளது.
கூடுதலாக, இந்தச் சான்றிதழ்கள் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் கல்விகற்கும் 28 பாடசாலையைச் சேர்ந்த 2,300 மாணவர்களுக்கும், பிரிவேனாக்களில் கல்விகற்கும் 30,000 சாதாரண மற்றும் துறவியர் மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன.
மேலும், பாடசாலை மாணவர் ஊட்டச்சத்து திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலும் தொடர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.