இளம் பெண்ணின் உயிரைப் பறித்த Reels மோகம்
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்காக காணொளி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் (Reels) எடுக்கும் ஆர்வம் உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றுகொண்டிருக்கின்றது.

தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற காட்சி
பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மோகினி என்ற பெண், தனது வீட்டில் சமூக வலைத்தளத்திற்காக காணொளி ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற ஒரு காட்சியினைப் படமாக்க முயன்ற அவர், தனது கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு ஒரு சிறிய நாற்காலியின் மீது நின்றுள்ளார்.
காணொளி பதிவாகிக்கொண்டிருந்த போதே, அவர் நிலைதடுமாறி நாற்காலியில் இருந்து வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் கழுத்தில் இருந்த கயிறு இறுகியதால், நடிப்பு நிஜமாகி சில நொடிகளிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.