2025யின் முதல் 5 நாட்களில் இலங்கையில் வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
இலங்கைக்கு 2025 ஆம் ஆண்டின் முதல் 5 நாட்களிலேயே 39, 415 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 481 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த 5 நாட்களில், இந்தியாவில் இருந்து 6,183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,928 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 2 ,921 சுற்றுலாப் பயணிகளும், ஆஸ்திரேலியாவிலிருந்து 1,708 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 1,605 சுற்றுலாப் பயணிகளும்,
போலந்திலிருந்து 1,539 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 1,228 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,196 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 1, பயணிகளும் இலங்கை வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.