வாடகை வீட்டில் பெரும் போதைப்பொருள் களஞ்சியம் ; விடுதி ஊழியரின் தில்லாலங்கடி வேலை
காலி அஹுங்கல்லை பகுதியில் வாடகை வீடு ஒன்றில் சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அஹுங்கல்லை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வதுகெதர, ஆந்தாதொல பகுதியில் சந்தேகநபர் வாடகைக்கு எடுத்திருந்த இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது.

15 கோடி ரூபாய் ஹெரோயின் 5 கோடி ரூபாய் ‘ஐஸ்’
அங்கிருந்து சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் 5 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேக நபர் பலபிட்டிய, மகலதூவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய விடுதி ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் குறித்த இல்லத்தை வாடகைக்கு எடுத்து, அதை போதைப்பொருள் விநியோக நிலையமாகப் பயன்படுத்தி வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சம்பவத்தின் பிரதான கடத்தல் குழு குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.