மத்திய கிழக்கில் பதற்றம் ; சற்றுமுன்னர் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரானை நோக்கி "தற்காப்பு நோக்கிலான தாக்குதலை" முன்னெடுத்துள்ளது. இதற்குப் பிறகு ஈரானில் நிரந்தர மற்றும் விசேட அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz தெரிவித்தார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின் படி, ஈரானால் ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்த முன்கூட்டிய தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
உளவுத்துறை தகவலின்படி, ஈரானிடமிருந்து ஏவுகணிகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மையப்பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டுள்ளன.

ஈரானிய அரசு ஊடகங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் அரசு நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்து பொதுமக்களை பாதுகாப்புப் புகலிடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை, நாட்டின் வான்வெளி சிவில் விமான போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், இஸ்ரேலின் பல பகுதிகளில் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வான்வழி மோதலுக்குப் பிறகு, தற்போதைய இந்த நேரடி ராணுவ மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை உச்சகட்டத்திற்கு எடுத்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்றுள்ளதாகவும், அங்கு வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருவதாக Wall Street Journal தகவல் வெளியிட்டுள்ளது.