ஹோட்டல்களுக்கு இடையில் பராசூட்டில் தாவிய சுற்றுலாப்பயணி ; விசாரணை ஆரம்பம்
வெலிகம – பெலேன நகரில் உள்ள சுற்றுலா விருந்தகம் ஒன்றின் கூரையிலிருந்து மற்றுமொரு விருந்தகத்திற்கு பராசூட்டின் உதவியுடன் பயணித்த வெளிநாட்டவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர் நேற்று நள்ளிரவு விருந்தகத்திற்கு சென்று அங்குள்ள நபர் ஒருவர் ஊடாக விருந்தகத்தின் விபரங்களை வினவியுள்ளார். இதனையடுத்து அவர் கூரைமீது ஏறியுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் பின்னர், அவர் பராசூட்டின் உதவியுடன் அருகிலிருந்த மற்றுமொரு விருந்தகத்திற்கு சென்றுள்ளமை முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வெளிநாட்டவர் அந்த விருந்தகத்தில் தங்கியிருந்தவர் அல்ல எனவும் இதுவரை அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.