இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டின் கடந்த ஐந்து மாதங்களில் 5 இலட்சத்து 24 ஆயிரத்து 486 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருமளவு அதிகரிப்பு
கடந்த மாதத்தில் மாத்திரம் 83 ஆயிரத்து 339 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் அது பெருமளவு அதிகரிப்பை காட்டுகிறதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் மாத்திரம் 30 ஆயிரத்து 207 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டின் கடந்த ஐந்து மாதங்களில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 175.8 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.