இந்த மாதம் 15 நாட்களுக்குள் இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இந்த வருடத்தின் பெப்ரவரி 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறை
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
இந்த வருடம் 15 நாடுகளை இலக்காகக் கொண்ட உலகளாவிய சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி 15ஆம் திகதி வரையான நிலவரப்படி, சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
குறிப்பாக T20 கிரிக்கெட் போட்டியைக் குறிப்பிட விரும்புகிறேன். அதன் மூலம், சுற்றுலாத் துறையிலிருந்து நிறைய கவனத்தை ஈர்க்க முடிந்தது.