யாழில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கைகள்!
"கொர்டேலியா குரூஸ்" எனும் உல்லாசப் பயணக் கப்பல் மூலம் கடந்த மூன்று மாதங்களில் ஒன்பது தடவையாக 6478 சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இந்தக் கப்பல் சேவை (16.06.2023) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது.
தொடர்ந்து வடமாகாண சுற்றுலா சபையின் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்று யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளை வழங்கி அவர்களை மகிழ்விப்பதுடன் தென்னிந்திய நடனம் சார்ந்த சில நடனங்களை உற்சாகப்படுத்தும் விசேட நிகழ்வு அண்மையில் யாழ்.தெலிப்பளை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.