இலங்கை இளம் அணியின் வலுவான வெற்றி ; அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை 106 ஓட்டங்களால் வெற்றி
இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 40.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதற்கமைய, இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகன் விருது விமத் தினசரவுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியில் இலங்கை அணியின் தலைவராக விமத் தினசரவும், அயர்லாந்து அணியின் தலைவராக ஒலிவர் ரிலேயும் செயற்பட்டனர்.
'ஏ' (A) பிரிவின் கீழ் போட்டியிடும் இலங்கை அணி, அண்மையில் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 203 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.