100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் முழு சூரிய கிரகணம் ; இருளில் மூழ்கவுள்ள நாடுகள்
100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் ஒரு அரிதான முழு சூரிய கிரகணம் 2027ஒகஸ்ட் 2, ஆம் திகதி அன்று, நிகழ உள்ள நிலையில் இந்த சூரிய கிரகணத்தால் ப நாடுகள் 23 நிமிடங்கள் இருளில் மூழ்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
2027 ஆகஸ்ட் 2-ம் தேதி ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கும் முழு சூரிய கிரகணம், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு
தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளை ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும்.
100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்த கிரகணம், 1991 - 2114 ஆண்டுகளுக்கு இடையில் நிலப்பரப்பில் இருந்து பார்க்கக்கூடிய மிக நீண்ட முழு சூரிய கிரகணமாகும். பொதுவாகவே முழு சூரிய கிரகணங்கள் கண்கவர்ந்தவைதான்.
ஆனால், 2027 ஆகஸ்ட் நிகழ்வு அதன் அசாதாரண நீண்ட நேரம் காரணமாகத் தனித்து நிற்கும். இந்த நீண்ட இருண்ட நேரம், இந்த கிரகணப் பாதையில் இருக்குறவர்களுக்கு, ஒரு அரிய வானியல் அவதானிப்புக்கும், மறக்க முடியாத அனுபவத்திற்கும் வழிவகுக்கும்.
அதேவேளை 2027 ஆகஸ்ட் 2-ம் தேதி, பூமி சூரியனில் இருந்து மிகத் தொலைவில் உள்ள அப்ஹீலியன் (aphelion) நிலையில இருக்கும். இதனால சூரியன் வானத்தில் சிறிதளவு தெரியும்.
அதே சமயம், சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிகீ (perigee) நிலையில இருக்கும். இதனால சந்திரன் பெரியதாக தெரியும். சூரியன் சிறிதாகவும் சந்திரன் பெரியதாகவும் தோன்றுவதால், கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கிறது.
2027 ஆகஸ்ட் 2 முழு சூரிய கிரகணம் வெறும் ஒரு வானியல் நிகழ்வு மட்டுமல்ல; இது அரிய அனுபவம். அதன் தனித்துவமான கால அளவு மற்றும் அதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகின்றது.