இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் 3 பழங்கள்
தற்போதைய வேலைப்பளுமிக்க பணியிட சூழலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் தான் முதன்மையான காரணம். அதுவும் ஒருவருக்கு இதய பிரச்சனையானது ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நமது பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப நிகழ்கிறது.

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஆரம்பத்தில் இருந்தே இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அவ்வாறு இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் பழங்கள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.

மாதுளம் பழம்
மாதுளம் பழத்த்தில் உள்ள பியூனிக்காலஜின் என்னும் பொருள், இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது

ஆரஞ்சு
ஆரஞ்சு பழமும் உடலுக்கு மிகவும் நல்லது. "ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனால் இந்த பழத்தை உட்கொள்வதால் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும். கூடுதலாக இப்பழத்தில் ஹிஸ்பிரிடின் என்னும் கலவை உள்ளது. இது வாஸ்குலர் எண்டோதிலியம், இரத்தக்குழாய்களுக்கு உள்ளே உள்ள பகுதிகளில் அழற்சி ஏற்படாமல், மென்மையாகவும், நிலையாகவும் வைத்துக் கொள்கிறது. இதனால் நைட்ரிக் ஆக்ஸைடு சிக்னலிங் நன்றாக உள்ளது மற்றும் இரத்த அழுத்தமும் குறைகிறது

ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடலாம்.
