வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு; தாதியர்களுக்கு பாராட்டு
குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தை தற்போது மருத்துனமனையில் தாதியர்களின் அன்பான கவனிப்பில் உள்ளார்.
பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் பரகஹதெனிய சிங்கபுர வீதி வயல்வெளியில் கடந்த வாரம் வீசிவிட்டுச் சென்ற நிலையில் , பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பலர்
இந்நிலையில் குழந்தையை ததெடுக்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டிப் போட்ட வண்ணம் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் அழைப்புக்கள் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயால் தூக்கி எறிந்து விட்டுச் சென்ற இந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தற்போது தாதியர்கள் தாயைப் போல் பராமரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் குழந்தைன் அழகி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் , குழந்தையை அன்பாக அரணைத்து கவனிக்கும் தாதியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.