உலகிலேயே தங்கம் அதிகம் வைத்திருக்கும் முதல் 5 நாடுகள் எவை தெரியுமா!
ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்த நாட்டின் பொருளாதார சிறப்பின் அடையாளம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில், உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்துள்ள நாடுகள் தொடர்பிலான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தங்க கையிருப்பில் முதல் 5 நாடுகள்
அதிகமான தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் முதல் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. உலகிலேயே அதிகபட்சமாக 8,133 டன் தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்திருக்கிறது.
2 வது நாடாக ஐரோப்பிய நாடான ஜெர்மனி உள்ளது. ஜெர்மானியிடம் 3,355 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது.
3 வது இடத்தில் இத்தாலி உள்ளது. அந்த நாடு கஜானாவில் 2,452 டன் தங்கத்தை வைத்துள்ளது.
4 வது இடத்தில் மற்றுமொரு ஐரோப்பிய நாடான பிரான்ஸ் உள்ளது. பிரான்சிடம் 2,437 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது.
மதிப்புமிகு மஞ்சள் உலோகம் இருப்பின் அடிப்படையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. அந் நாட்டிடம் 2,326 டன் தங்கம் உள்ளது.