வெளிநாட்டு குற்றவாளியின் நெருங்கிய சகா ஆயுதங்களுடன் கைது
துப்பாக்கி ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மனிதக் கொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) இரவு மீகலேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலன்கமுவ பகுதியில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஆவார்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் டி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவர் வெளிநாட்டில் வசிக்கும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் நெருங்கிய சகா என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மனிதக் கொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.