திருமதி உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை பெண்!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த அழகிப் போட்டியானது, உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகளின் பங்கேற்புடன் நாளை (22) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சபீனா யூசுப்பை வழியனுப்பி வைக்க உறவினர்கள் மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திருமணமான அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இஷாதி அமந்தா உள்ளிட்ட பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக கூறப்படுகின்றது.