அளவுக்கு மிஞ்சிய சீரகம் ஆபத்தை தரும்!
சீரகம் சமையலறையில் நிச்சயமாக இருக்கும் ஒரு மசாலா பொருள் சீரகம் ஆகும். உணவுக்கு சுவையும் மணமும் சேர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது. அதோடு சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சீரகத்தை உணவில் சேர்ப்பதால், செரிமான சக்தி மிகவும் அதிகரிக்கிறது. ஆனால், அளவிற்கு அதிகமான அளவில் சீரக எடுத்துக் கொள்வது பல தீங்குகளையும் விளைவிக்கும் எனவும் சொல்லப்படுகின்றது.
எனவே, சீரகத்தை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது.
சீரகத்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
எரிச்சல் உணர்வு;
சீரகத்தை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதன் காரணமாக, மார்பில் எரிச்சல் உணர்வு பிரச்சனை ஏற்படுகிறதாம்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கும் ஆபத்து;
சீரகத்தை அதிகமாக உட்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும் எனவும் சொப்பட்டுகின்றது. எனவே சீரகத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் சீரகத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகின்றது.