இலங்கையில் டோக்கன் யுகம் ஆரம்பம்!
தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் இந்த டோக்கன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு காணப்படுவதுடன் டோக்கன் நடைமுறையும் காணப்படுகின்றது.
அதேசமயம் டோக்கன் பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளே வழங்கப்படுவதன் காரணமாக வாடகை வாகன சாரதிகள் நாளாந்தம் பல மணிநேரம் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்கின்றனர்.
அதேசமயம் இவ்வாறு காத்திருப்பதனால் தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
