இலங்கையில் டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் பெறுமதி
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 01 சதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளை நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 76 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 310 ரூபாய் 64 சதமாக பதிவாகியுள்ள அதேசமயம் நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 00 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.