இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி
நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 297 ரூபாய் 02 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 296 ரூபாய் 87 சதமாகக் காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 45 சதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 59 சதமாகக் காணப்பட்டது.