இன்று வானில் தோன்றவுள்ள அதிசயம்
2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று நள்ளிரவு மற்றும் நாளை காலை தெரியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விண்கல் மழை சிம்ம ராசியில் ஏற்படுவதால், இதற்கு லியோனிட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விண்கல் மழை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பூமி வால் நட்சத்திரத்தின் பாதையில், பூமியின் வளிமண்டலத்துடன் செல்லும்போது வால் நட்சத்திரத்தால் விடப்பட்ட சிறிய தூசி துகள்களின் தொடர்பு காரணமாக இந்த விண்கல் மழை ஏற்படுகின்றது.
எனவே, இந்த விண்கல் மழையின் போது அந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்துடன் அதிக வேகத்தில் மோதுவதால், இந்த விண்கற்களை நாம் அதிக பிரகாசத்துடன் பார்க்க முடியும்.
இது கிழக்கிலிருந்து வெளிப்பட்டு இரவில், அதாவது விடியற்காலையில் வானத்தில் வெகுதூரம் பயணிக்கும். எனவே, இந்த விண்கல் மழையைப் பார்ப்பதற்கு சிறந்த நேரம் பொதுவாக அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை ஆகும்.
இந்த காலகட்டத்தில் இந்த விண்கல் மழையை பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 20 விண்கற்கள் வரை நாம் கவனிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.