அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றைய (21) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 65 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 68 சதம், விற்பனைப் பெறுமதி 388 ரூபாய் 32 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 323 ரூபாய் 76 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 98 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 33 சதம், விற்பனைப் பெறுமதி 216 ரூபாய் 62 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபாய் 73 சதம், விற்பனைப் பெறுமதி 200 ரூபாய் 58 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 78 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 9 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 90 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 98 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.